யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்கள் குணமடைவதற்கு சில காலம் தேவை
யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்கள் குணமடைவதற்கு சில காலம் தேவைப்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லா தொழிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்க போதிலும், அதன் ஏற்பட்ட காயங்களின் வலி நீங்க இன்னு பல மாதங்களோ அல்லது சில வருடங்களோ கால அவகாசம் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு யுத்த வெற்றிகளை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கும் தருவாயில், முள்ளியவாய்க்கால் பகுதியில் பலர் இன்னமும் சிக்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.படையினருக்கும், புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தில் சிக்குண்டு பல பிரதேசங்களில் தவிக்கும் அப்பாவி பொதுமக்களை மீட்டு வவுனியாவிற்கு அழைத்து வரவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.குறித்த பிரதேசங்களில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் உணவு வசதிகளை வழங்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply