தீர்மானத்தை மீறியது எதிர்த் தரப்பு : கிரியெல்ல குற்றச்சாட்டு
வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் போது அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் வாக்கெடுப்பு கோருவதில்லையென கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுத்திருந்ததாகவும், இந்த தீர்மானத்தை கூட்டு எதிரணி உடைத்துள்ளதாகவும் சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நேற்று (28) பாராளுமன்றத்தில் நடாத்தப்பட்ட அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டின் மீதான வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டது. இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆஜராகியிருக்கவில்லை. வாக்கெடுப்பு இல்லையென்றிருந்ததனால் அவர்களின் வருகை கட்டாயப்படுத்தப்படவில்லை. திடீரென வாக்கெடுப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டமை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறிய செயல் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply