ஸ்ரீ ல.சு.க. – மஹிந்த குழுவுடன் இணைவது சாத்தியமற்றது:ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் நடாத்தும் பேச்சுவார்த்தை பயனற்ற ஒன்று எனவும், இதனால், எதிர்வரும் தேர்தலில் தனியாகவே கட்சி போட்டியிட வேண்டியுள்ளதாகவும் ஸ்ரீ ல.சு.க.யின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவொரு இடத்திலும் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் பேசப்படவில்லையெனவும், இந்த நிலையில் அக்கட்சியுடன் கூட்டுச் சேர்வது பற்றி தொடர்ந்தும் பேசுவது ஸ்ரீ ல.சு.கட்சியை தாரைவார்ப்பதாகும் எனவும் ஜனாதிபதியிடம் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் நடாத்திய பேச்சுவார்த்தையிலும் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தைப் பாதுகாப்பதாயின் தனது முழுமையான ஒத்துழைப்பைத் தருவதாக ஜனாதிபதியிடம் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply