தேர்தல் பிரசாரத்தில் ஜெகன்மோகன்ரெட்டி சகோதரியிடம் கைகுலுக்குவதுபோல மோதிரத்தை திருடிய தொண்டர்
ஆந்திரா மாநிலத்தில் பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றுக்கான தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தெலுங்குதேசம் கட்சிக்கும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார்கள்.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா வாகன யாத்திரை மேற்கொண்டு பிரசாரம் செய்துவருகிறார். குண்டூரில் வாகனத்தில் இருந்தபடி அவர் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
பேசி முடித்ததும் அங்கு இருந்து புறப்படும்போது அருகில் இருந்த தொண்டர்கள் ஷர்மிளாவுக்கு கைகொடுத்தனர். அவரும் வாகனத்திலேயே இருந்தபடி தொண்டர்களுடன் மகிழ்ச்சியாக கைகுலுக்கினார். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு தொண்டர் கைகுலுக்குவதுபோல ஷர்மிளாவின் மோதிரத்தை நைசாக உருவிக்கொண்டு சென்றுவிட்டார்.
ஷர்மிளா இதை அறிந்தாலும் அவரால் அந்த கூட்டத்தில் தனது மோதிரத்தை திருடியது யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அந்த இடத்தில் இருந்து சென்றால்போதும் என்ற நிலையில் அவர் வாகனத்தில் அடுத்த ஊருக்கு பிரசாரத்துக்கு சென்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply