கொடநாடு விவகாரம் பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை கோரிய மனு தள்ளுபடி
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தில் தமிழக அரசையும் அதன் செயல்பாடுகளையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாகவும் பேசி வருகிறார்.
இந்நிலையில், கொடநாடு விவகாரம் பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை கோரி அதிமுக செய்தி தொடர்பாளர் முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.
இதேபோல் பிரசாரத்தின்போது கொடநாடு விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கொடநாடு விவகாரம் குறித்து பேசியது தொடர்பான அவதூறு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதுபற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply