யாழில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது

மானிப்பாய் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து தந்தையையும் மகனையும் வாளினால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உடுவில் பகுதியில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 21 வயதுடைய குறித்த இளைஞர் கைது செயயப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் புகுந்த கும்பலொன்று வீட்டில் இருந்த இளைஞன் மீதும் அவரது தந்தை மீதும் வாளினால் வெட்டி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவத்தில் காயமடைந்த தந்தையும் மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தை ஐந்து பேர் கொண்ட குழுவினரே மேற்கொண்டனர் என முறைப்பாட்டாளர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply