மாக்கும்புற போக்குவரத்து நிலையம் எமது ஆட்சியில் அமைக்கப்பட்டது : மஹிந்த
கொட்டாவ மாக்கும்புற போக்குவரத்து நிலையம் தமது ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த போக்குவரத்து நிலையத்திற்கு சீமேந்து பூசுகின்ற வேலையை மாத்திரமே தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தற்போதைய அரசாங்கம் ராஜபக்ஷ ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களை திறந்துவைக்கும் நிகழ்வுகளையே தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
மாக்கும்புற போக்குவரத்து நிலைய நிர்மாணப்பணிகள் அமைச்சர் சம்பிக்க ரணவகவின் கீழுள்ள மாநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply