சுதந்திர கட்சியின் மே தின கூட்டத்திற்கு மஹிந்தவுக்கு அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை அழைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின ஏற்பாட்டு குழுவின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதேவேளை கூட்டு எதிர்கட்சியிலுள்ள சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும், இம்முறை மே தின கூட்டம் கம்பஹா நகரசபை மைதானத்தில் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் கட்சி ஆதரவாளர்களை வரவழைக்கவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply