உயர்தர மாணவர்களுக்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் ஏனைய மாணவர்களுக்கும் டெப் கணினி : கல்வி அமைச்சர்
தொழில்நுட்பம் மற்றும் அறிவுடன் கூடிய நாடுகளே தற்போது உலகில் முன்னணியில் உள்ளன. அதேபோன்று எமது மாணவர்களும் தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் யுகத்திற்கு பிரவேசித்துள்ளனர். இன்னும் பத்து வருடங்களின் பின்னர் இந்த நிலைமை இன்னும் மாற்றம் அடையும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மிலாகிரிய புனித பால்ஸ் மகளிர் கல்லூரியில் நேற்று (03) நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வுக்குக் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், மின்வலு மற்றும் மீள் புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Screen Shot 2019-04-04 at 1.27.58 PMஇதன்போது மேலும் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க;
நாடு தொழில்நுட்பம் , தகவல் தொழில்நுட்பம், மருத்துவ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. தொழில்நுட்ப அறிவுடன் முன்நோக்கி செல்வதற்கு எமது மாணவர்களுக்கு விரிவான வாய்ப்பினை வழங்க வேண்டும். தற்போது பாடசாலைகளில் உயர்தரத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில் பாடதுறைகள் இதற்கு பெரும் உந்து சக்தியாக அமையும் எனத் தெரிவித்தார்.
Screen Shot 2019-04-04 at 1.27.29 PMஅதன் பின்னர் உரையாற்றிய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்;
உயர்தர வகுப்புக்குப் போன்று எதிர்காலத்தில் ஏனைய வகுப்புகளுக்கும் டெப் கணிணி வழங்க நடவடிக்கை எடுப்போம். தொழில்நுட்பத்துடன் உலகம் ஒவ்வொரு நாளும் மாற்றம் அடைந்து வருகின்றது. தற்போது வயது வந்தோர் புரியும் தொழில்களை பார்க்கிலும் தற்போதைய இளைஞர்கள் புரியவுள்ள தொழில் முற்றிலும் மாற்றமானது. எனவே அந்த நிலைமைக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களாக எமது இளைஞர்களை நாம் மாற்ற வேண்டும்.
புத்தகப் பைக்குப் பதிலாக மாணவர்கள் டெப் கணினியுடன் பாடசாலைக்கு வருவதற்கு எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலதிக வாசிப்பு நூல், ஈ கற்றல், ஈ வகுப்பு உள்ளிட்ட வசதிகள் அதனூடாக பெற்றுக்கொடுக்கப்படும்.
இந்நாட்டின் பாடசாலை கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான திறமைகள் கொண்ட அதிபர்கள் கட்டமைப்பில் இருக்க வேண்டும். எனினும் முன்னைய காலங்களில் அதிபர்களை இணைத்துக்கொள்ளும் முறைமைக்குப் பதிலாக நியாயமான முறையில் நியமனம் வழங்கும் முறைமையைக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிகழ்வின் போது மறுசீரமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலையின் பிரதான கேட்போர் கூடம் மற்றும் நிர்வாக கட்டடம் ஆகியன மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply