கொழும்பு போகுமுன் நாராயணன் கலைஞரை சந்தித்தார்

வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் இன்று (மே. 20) கொழும்பு வரவுள்ளனர். இவர்கள் கொழும்பு வருவதற்கு முன் தமிழ் நாடு முதல்வர் மு. கருணாநிதியை நேற்று சந்தித்து கலந்துரையாடி ஆலோசனைகள் பெற்றுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பை அடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த எம்.கே.நாராயணன்.” நான் நாளை இலங்கை செல்கின்றேன். அங்கு சென்று பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளவுள்ளேன்” எனத்தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடித்து உள்ளதாகவும் புலிகளின் தலமையை அழித்துள்ளதாகவும் அறிவித்துள்ள நிலையில் இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பு வரும் நிலையில் இலங்கைக்கு ரூ.500 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ரூ.500 கோடி நிவாரண பொருட்களை இந்தியா தயாராக வைத்துள்ளது. இது தவிர கூடுதலாக ரூ.100 கோடி நிவாரண உதவியை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். தமிழக அரசும் ரூ.25 கோடி நிவாரண உதவியை வழங்குகிறது.

கொழும்பு வரும் இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு ஆலோசகர் என். கே நாராயணன் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழு ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். மேலும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டவுள்ள விடயங்கள் மற்றும் தற்போதைய நிலவரம் உட்பட வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் தற்போதைய நிலை குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தை பரவலாக்கும் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இலங்கை அரசமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு இன பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்குவோமென டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி தெரித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply