பட்ஜெட் : எதிராகவும், ஆதரவாகவும் வாக்களித்தவர்கள் குறித்து ஸ்ரீ ல.சு.க.யின் நிலைப்பாடு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் எல்லோரும் இணைந்து ஒரு தீர்மானத்தை எடுத்ததன் பின்னர் மூவர் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளதாகவும், இவர்கள் குறித்து கட்சி எதிர்வரும் நாட்களில் தீர்மானம் எடுக்கும் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதன் ஊடாக மாத்திரம் பொதுக் கூட்டமைப்பொன்றை கட்டியெழுப்ப முடியாது. மாறாக, பரந்த வேலைத்திட்டமொன்று அதற்காக தேவை.
இந்த அரசாங்கத்தைத் தோற்கடிக்க முறையான கூட்டணி அமைக்க முன்வருவதாயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயார். மாறாக, வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கச் செய்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நெருக்கடிக்குள்ளாக்க யாராவது நினைப்பதாயின் அதற்கு உடன்பட தாம் தயாரில்லை.
விஜேமுனி சொய்சா, பியசேன கமகே போன்றோர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்துகொண்டு வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இவர்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கட்சி தீர்மானம் ஒன்றை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தனியார் வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply