மாலத்தீவு தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு : வெற்றி பெறப்போவது யார்?
87 இடங்களைக் கொண்டுள்ள மாலத்தீவு நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அங்கு அதிபராக இருந்த அப்துல்லா யாமீன் பதவி பறிப்புக்கு பின்னர் நடந்த தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதேபோன்று மற்றொரு முன்னாள் அதிபரான முகமது நஷீத், தலைமறைவு வாழ்க்கையை முடித்து நாடு திரும்பிய நிலையில் இந்த தேர்தல் நடந்துள்ளது. இந்த தேர்தலில் அவர் முக்கிய வேட்பாளராக உள்ளார்.386 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே விறுவிறுப்பாக இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக்கடமையை ஆற்றினர்.
அதிபர் முகமது சோலி காலை 10.15 மணிக்கு தலைநகர் மாலேயில் உள்ள ஜமாலுதீன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுபோட்டார். அதைத்தொடர்ந்து வாக்காளர்கள் திரளாக வந்து வாக்கு அளிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார். இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் தற்போதைய அதிபர் முகமது சோலி ஆகியோரின் எம்.டி.பி. கட்சி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த தேர்தல் மாலத்தீவில் மட்டுமல்லாது அந்த நாட்டினர் வசிக்கிற இந்தியா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் நடந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply