அரசாங்கத்துக்குள் இப்போது பெருச்சாளிகள் இல்லை : அமைச்சர் ராஜித
அரசாங்கத்துக்குள் காணப்பட்ட பெருச்சாளிகள் வெளியேற்றப்பட்டது முதல், அரசாங்கம் சரியான திசையில் பயணிப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பதுரலிய ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்காக ராஜபக்ஸாக்களின் பற்கல் ஒவ்வொன்றாக கலட்டப்பட்டன. மஹிந்த ராஜபக்ஸவைத் தோற்கடித்த எமக்கு கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதியையும் தோற்கடிக்க முடிந்தது.
நாம் சலைக்கவில்லை. மக்கள் எழுச்சிப் போராட்டமொன்றை முன்னெடுத்து 52 நாட்களில் அரசியல் நெருக்கடியை வெற்றி கொண்டோம். நல்லாட்சி அரசாங்கத்துக்குள் ஜனாதிபதி உட்பட காலினால் பிடித்து இழுக்கும் அமைச்சர்கள் பலர் இருந்தனர். நான் அவர்களை கடந்த பாராளுமன்றத்தில் பெருச்சாளிகள் என அறிமுகம் செய்தேன்.
இத்தகையவர்கள் அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சனம் செய்தனர். இதனால், கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. இருப்பினும், அந்த பெருச்சாளிகள் தற்பொழுது அரசாங்கத்தில் இல்லை. இதனால், அரசாங்கம் தனது அபிவிருத்திப் பயணத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து வருகின்றது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply