அல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்ட பாரிய பங்களிப்புச் செல்லுத்தும் : ஜனாதிபதி
பேசும் மொழியை அடிப்படையாகக் கொண்டு மக்கள் பிளவுபடாதிருக்க சகல அரசியல்வாதிகளும் கட்சி பேதமின்றி பணியாற்ற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார். புனித குர்ஆனின் சிங்களப் பிரதிகளை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்:
இஸ்லாத்தின் வரலாறு தொடர்பில் புரிந்து கொள்வதற்கும் முஸ்லிம் மக்களின் கலாசாரம் மற்றும் மதப் பின்புலம் தொடர்பில் ஏனைய மதத்தினரும் புரிந்துகொள்ளக் கூடியவாறு சிங்கள மொழியில் அல்குர்ஆனை மொழிபெயர்த்திருப்பது சிறப்பம்சமாகும்.
மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக அமைந்துள்ளது. புரிந்துணர்வு, நம்பிக்கையின் அடிப்படையிலே சகல இன,மதத்தவர்களும் பிளவுபடுவதைத் தடுக்க முடியும். புனித அல்குர்ஆனை சிங்கள மொழியில் மொழிபெயர்த்தமை நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு பாரிய பங்களிப்புச் செல்லுத்தும்.
மேலும் மொழியை அடிப்படையாக்கொண்டு பாடசாலைகளை வகைப்படுத்தும் நடவடிக்கைகளையும் நிறைவுசெய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply