அதிக வெப்பம் காரணமாக நோய்கள் பரவும் அபாயம்
நிலவிவரும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக பொகவந்தலாவ பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில், வயிற்றோட்டம், வாந்தி காரணமாக, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பொகவந்தலாவ பிரதேச வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களும் பெரியோர்களும் வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுச் செல்வதோடு, வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கிச் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
கொதித்து ஆறிய நீரைப் பருகுமாறும் மலசலகூடத்துக்குச் சென்று வந்த பிறகு, சவர்க்காரமிட்டு இரண்டு கைகளையும் நன்றாகக் கழுவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் நீர் அருந்தும் அளவை அதிகரித்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply