ஓட்டுக்காக காசு கொடுப்பவர்களை விரட்டியடிக்கும் நிலை வரும் : சீமான் பிரசாரம்
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். தமிழகத்தில் தனித்து மக்களை நம்பி போட்டியிடும் கட்சி நாம் தமிழர் கட்சி தான். எங்களுக்கு என்று தனி பாதை, கொள்கை உண்டு.
நாட்டில் மக்கள் இரவில் பசியோடு உறங்க மாட்டார்கள் என்று மோடி, ராகுல்காந்தி செல்வார்களா? ஆனால் அந்த உறுதியை நாம் தமிழர் கட்சியால் தான் தர முடியும். நாங்கள் ஏந்தும் புலிக்கொடி பரம்பரைக்கொடி. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிடுகிறது.
ஆனால் இப்போது தேர்தலுக்காக ரூ.72 ஆயிரம் தருவோம், ரூ.6 ஆயிரம் தருவோம், தொழில் தொடங்க வட்டியில்லா கடன் தருவோம் என்கிறார்கள். நீங்கள் கொடுப்பது யாருடைய பணம்?. மக்கள் பணம் தான். அவர்கள் பணத்தை எடுத்து, அதில் பாதியை அவர்களிடமே கொடுப்பது சாதனையா?
காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி அவர்களால் ஓட்டு கேட்க முடியுமா? அவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எங்களால் தான் முடியும். ஒற்றைக்கட்சி ஆட்சி முறையை ஒழிப்பது தான் எங்கள் நோக்கம். ஓட்டுக்காக காசு கொடுப்பவர்களை துரத்தி அடிக்கும் நிலை வரும்.
தஞ்சையில் பிரசார பொதுக்கூட்டத்தையொட்டி நடந்த கலைநிகழ்ச்சியை சீமான் கட்சியினருடன் முன்வரிசையில் அமர்ந்து பார்வையிட்டார்.
சேலத்தில் 8 வழிச்சாலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது நாம் தமிழர் கட்சி தான். தமிழகத்தின் கேடு கெட்ட அரசியலுக்கு காரணமே தி.மு.க. தான். தி.மு.க., பிரசவித்த கொடுமை தான் அ.தி.மு.க.. பா.ஜ.க.வை தமிழகத்திற்கு கொண்டு வந்தது தி.மு.க. தான். முதலில் தோளில் சுமந்தவர்கள் தற்போது காலூன்ற விடமாட்டோம் என்கிறார்கள்.
கச்சத்தீவு, காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினையில் பா.ஜ.க., காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?. இவர்களுக்கு ஏன் வாக்கு செலுத்த வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply