பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டதால் நாட்டின் தேசிய அபிமானத்தையும் வென்றுள்ளோம்: கோத்தபாய ராஜபக்ஷ

நாட்டில் ஊடறுத்திருந்த பயங்கர வாதம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதால் எமது தாய் பூமியை மீட்டதும் மட்டுமன்றி இதுவரை காலமும் இழக்கப்பட்டிருந்த தேசிய அபிமானத்தையும் படையினர் வெற்றிகொண்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார். கடந்த 30 வருட காலங்களாக நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று அனைவருக்கும் தலையிடியாக விளங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வீரமிகு படையினரால் முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் அவர் கூறினார்.

காலி, பூசா பகுதியில் இடம்பெற்ற இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றின் போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply