பா.ஜனதா தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு- ரஜினிக்கு அதிமுக வாழ்த்து
பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து வெளியிட்டு இருந்தார்.இதையடுத்து அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நதிநீர் இணைப்பு திட்டங்களை வரவேற்று இருக்கிறார் ரஜினிகாந்த்.
இதன் மூலம் தனது ஆதரவு பா.ஜனதா – அ.தி.மு.க. கூட்டணிக்கே என்பதை ரஜினிகாந்தின் குரல் உறுதி செய்திருக்கிறது.
125 வருட காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதும், முல்லைப் பெரியாறு உரிமையில் முதல்கட்ட வெற்றியை ஈட்டியதும், அரை நூற்றாண்டு கனவான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றிட ஆணையிட்டதும், தி.மு.க. விரயமாக்கிய பழைய வீராணம் திட்டத்தை புதிய வீராணம் திட்டமாக்கி தலைநகர் சென்னையில் தாகம் தீர்த்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்.
இதற்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் தேசிய நதிகளை இணைப்பதற்கும், குறிப்பாக கோதாவரி ஆற்றின் உபரி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக கோதாவரி-கிருஷ்ணா, காவிரி இணைப்புத் திட்டத்தை ரூ.60 ஆயிரம் கோடியில் நிறைவேற்ற முன் வந்திருப்பதோடு, நீர் மேலாண்மை திட்டங்களுக்கு வெகுவான முன்னுரிமையை பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
இதனையெல்லாம் கருத்தில் கொண்டே பாய்ந்தோடும் நதியின் நீரை பாரத தேசம் எங்கும் இணைக்கும் திட்டங்களால் பசுமை கொஞ்சும் பிரதேசமாக இந்நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பத்தை கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை ஆதரிக்கிறார்.
இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணிக்கு தனது நல் ஆதரவை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே ‘காலா’ ஆதரவு கழகத்துக்கே என நமது அம்மா நாளிதழ் வெளியிட்ட செய்தி இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது. ரஜினிகாந்தை வாழ்த்துவோம். வரவேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply