பிரஜாவுரிமை நீக்கிக் கொள்ளும் நடவடிக்கை வெற்றி: கோட்டாபய தகவல்
தான் அமெரிக்கா நோக்கிப் பயணித்தமை தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக் கொள்வதற்கே எனவும், அந்த நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்து கொண்டாதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளா்.
இன்று (12) காலை அமெரிக்காவிலிருந்து நாட்டுக்க வருகை தந்த அவர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்கா சென்றிருந்த போது, படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் மகள், அவரது தந்தையின் மரணம் தொடர்பில் கோட்டாபயவுக்க எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர் அவரிடம் வினவிய போது,
தான் பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, இடம்பெற்றதாக கூறப்படும் ஊடகவியலாளர் ஒருவரின் கொலை, இன்னுமொருவரின் கைது தொடர்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்து அரசியல் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை எனவும், இதற்கு எதிராக இலங்கை மக்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களும் பாரிய ஆதரவை தனக்கு வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply