இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் : கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தமிழர்களை கொன்று குவித்த உச்சக்கட்ட போரை நிகழ்த்தியபோது அவரது தம்பி ராணுவ மந்திரி கோத்தபய ராஜபக்சே அந்நாட்டின் ராணுவ மந்திரியாக பொறுப்பு வகித்தார்.
முள்ளிவாய்க்காய் போரின்போது பல்லாயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட சதியில் கோத்தபய ராஜபக்சேவின் சதி முக்கியமானதாக கருதப்பட்டது. அவருக்கு எதிராக பல்வேறு போர் குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
தற்போது கனடா நாட்டில் வாழும் பாதிக்கப்பட்டவர் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது.
மேலும் தனது தந்தையை கோத்தபய ராஜபக்சே கொன்று விட்டதாக பிரபல பெண் பத்திரிகையாளரான அஹிம்சா விக்ரமதுங்கா என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இலங்கையை சேர்ந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு அமெரிக்காவிலும் நிரந்தர குடியுரிமை உண்டு. இலங்கை அதிபர் பதவிக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சமீபகாலமாக அமெரிக்காவில் தங்கியிருந்த கோத்தபய ராஜபக்சே இன்று இலங்கை திரும்பினார்.
தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அதிபர் தேர்தலில் போட்டியிடுதற்கு வசதியாக எனது அமெரிக்க குடியுரிமை விட்டுத்தருவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறேன் கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply