இராணுவத்தினரின் விசேட அதிரடிப்படை௧ பிரிவு இன்று சனிக்கிழமை காலை பூநகரியைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு

பூநகரியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 
 
இராணுவத்தினரின் விசேட அதிரடிப்படை௧ பிரிவு இன்று சனிக்கிழமை காலை பூநகரியைக் கைப்பற்றியிருப்பதாகவும், மெமுனு வொட்ச் 12 மற்றும் கஜபா படை 10 ஆகிய படைப்பிரிவுகள் இணைந்தே பூநகரியைக் கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூநகரியின் தெற்குப் பகுதியை நேற்றிரவு இராணுவத்தினர் கைப்பற்றியதாகவும், பூநகரி-பரந்தன் வீதியை மறித்து நல்லூர் பகுதியை இன்று காலை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னேறிய இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதல்களை நடத்தியபோதும்;, அவற்றை முறியடித்து இராணுவத்தினர் பூநகரியைக் கைப்பற்றியிருப்பதாக அமைச்சு அறிவித்துள்ளது.

பூநகரி கைப்பற்றப்பட்டிருப்பதை இராணுவத் தளபதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1993ஆம் ஆண்டின் பின்னர் அரசாங்கத்தால் முதன்முறையாக யாழ் குடாநாட்டுக்கான ஏ௩2 பூநகரி வீதியை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply