கிழக்கு கடல் மார்க்கமாவே நாட்டிற்குள் போதை பொருள் வருகின்றது :மைத்திரிபால சிறிசேன

அபின், கொக்கைன் உட்பட பல்வேறு போதைப்பொருட்கள் கிழக்கு மாகாண கடற்பரப்பின் ஊடாகவே நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாகவும், அவற்றினை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார்.

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவு விழாவும் முன்னேற்ற மீளாய்வு கூட்டமும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

நாட்டுக்காக ஒன்றிணைவோம் நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் முகமாகவே ஆரம்பிக்கப்பட்டது. நாட்டினை முன்னேற்றுவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அரசியல் கட்சிகள் பேதமென்றி, இனமத பேதமின்றி அனைத்து பேதங்களையும் மறந்து ஒன்றிணையவேண்டும்.

இந்த வேலைத்திட்டத்தினை நாங்கள் புத்தளத்தில் முதன்முதலில் ஆரம்பித்தோம். இதன்கீழ் புத்தளத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் இன்னும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் தடுப்பு திட்டம் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். கொக்கைன் உட்பட பல்வேறு போதைப்பொருட்கள் கிழக்கு மாகாண கடற்பரப்பின் ஊடாகவே நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.

இது தொடர்பில் முப்படையினர் உட்பட சகல பாதுகாப்பு பிரிவினரும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

போதைப்பொருள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த போதைப்பொருட்கள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கு மக்களின் உதவி இந்த நாட்டுக்கு தேவைப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply