தேசிய படை வீரர்கள் நன்றி பாராட்டு விழா
தேசிய படை வீரர் நன்றி பாராட்டு விழா நாளை 22 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்றத் திடலில் நடைபெறவு ள்ளது. நாளை பிற்பகல் 1.00 மணிக்கு பொரளை கெம்பல் பூங்காவிலிருந்து புறப்படும் மக்கள் பேரணி ஊர்வலம் 2 மணியளவில் பாராளுமன்றத் திடலையடைவதுடன் இப்பேரணியில் ஒன்றரை இலட்சம் பேர் பங்கேற்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படை வீரர்களைக் கெளரவிக்கும் வகை யில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இவ்வாரத்தில் பல்வேறு செயற் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. இதன் படி இன்று 21 ஆம் திகதி நாடளாவிய சகல பாடசாலைகளிலும் படையினரை வாழ்த்தும் நிகழ்வும் அது தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் வழிகாட்டலில் இடம்பெறவுள்ளன.
அத்துடன் சகல அரச நிறுவனங்களிலும் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் சகல அரச நிறு வனங்களுக்கும் அறிவிக்கும் விசேட சுற்றறிக்கை பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
22 ஆம் திகதி படையினருக்கான நன்றி பாராட்டு விழாவும் 23 ஆம் திகதி படையினரின் குடும்பங்களுக்கு உதவும் வேலைத் திட்டமும் 24 ஆம் திகதி சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 22 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் நன்றி பாராட்டு விழாவானது நாட்டைப் பாதுகாக்கும் பணி யில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினரை வாழ்த்துவதற்கான நிகழ்வாகவும், 23 ஆம் திகதிய நிகழ்வு படையினரின் குடும்பங்களுக்கு நேரில் சென்று பரிசுகளை வழங்கி கெளரவிக்கும் நிகழ்வாகவும் 24 ஆம் திகதி பெளத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத வழிபாடுகளை நடாத்தும் தினமாகவும் அமையவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply