நாட்டு மக்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் !

சிங்கள, தமிழ் புத்தாண்டின் மரம் நடும் சுபவேளை 11.17 மணிக்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த நேரத்தில் சகலரும் ஒரு மரத்தை நட்டி சுற்றாடலைப் பாதுகாப்பதில் ஒரு குடிமகனுக்குள்ள கடமையை நிறைவேற்றுமாறு நான் நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டில் பாதுகாப்பான ஒரு வன வளத்தை உருவாக்கவும், மனிதனைப் போன்று மிருகங்களுக்கும் வாழ்வதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கும் இப்பணி முக்கியமானது. இதன் மூலம் எமது நாட்டை சூபீட்சமான ஒரு நாடாக மாற்றுவதற்கும் முடியும்.

எனவே, இந்த சுபவேளையில் ஒவ்வொரு பிரஜையும் மரம் ஒன்றை நடுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply