விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ரட்னசிறி விக்ரமநாயக்க

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வசிக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பற்றி கவலைப் படவில்லை எனினும்,  நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்வொருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பின்நிற்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பாரிய அபிவிருத்தி திட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மட்டுமன்றி நாட்டின் ஏனைய பாகங்களிலும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
நாட்டின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சிகளிடமோ அல்லது வேறும் நபர்களிடமோ அனுமதி கோரப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச சமூகத்தினால் வழங்கப்படக் கூடிய சகல உதவிகளையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply