ராஜீவ் காந்தியின் 18ஆவது நினைவு தினம் : சோனியா காந்தி மலரஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆந் திகதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார். இன்று அவரது 18ஆவது நினைவு தினம் நாடு முழு வதும் கடைப் பிடிக்கப்படுகிறது. டில்லியில் ராஜீவ் சமாதி அமைந்துள்ள ‘வீர்பூமி’யில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதரா, இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, கேரள காங்கிரஸ் தலைவர் கே.எம்.மணி, புதிய எம்.பி.க்கள் ஆகியோரும் ராஜீவ் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக ராஜீவ் மறைந்து 18 ஆண்டுகளைக் குறிப்பிடும் வகையில் 18 குழந்தைகள் ராஜீவ் சமாதியில் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply