பெருந்தன்மையுடன் வெற்றியைக் கொண்டாடுங்கள்: ஜனாதிபதி

அரசு விடுதலைப்புலிகள் மீது பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதில், நாட்டு மக்கள் பெருந்தன்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். யாருடைய மனங்களையும் எந்த வகையிலும் புண்படுத்துவதற்கு இடமளிக்காத வகையில் இந்தக் கொண்டாட்டங்கள் அமையவேண்டும் என்பதை மக்கள் உறுதி செய்யவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் தொல்லைக்குள்ளாக்கப்பட்டதாகவும், நிந்திக்கப்பட்டதாகவும், கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டதாகவும் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த சிலரும், இடது சாரிக் கட்சிகளின் குழு ஒன்றும் கூறியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply