ஜனாதிபதி மஹிந்தவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்
“எந்த சக்தியாலும் தோற்கடிக்க முடியாதென கூறப்பட்ட விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவு க்குக் கொண்டுவந்து நாட்டில் அமைதியையும் சமாதா னத்தையும் ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென நாம் நோபல் பரிசு வழங்கும் குழுவுக்கு வேண்டுகோள் விடுகின்றோம்.
புத்தளம் தில்லையடி பகுதியில் வதியும் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களால் இக்கோரிக்கை விடப் பட்டது.யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பலியானது பற்றி அரசு செய்தி வெளியிட்ட பின்னர் இதுபற்றிய வெற்றி விழா நிகழ்வுகள் புதன்கிழமை (20.05.2009) தில்லையடி ரத்மல்யாய பகுதியில் இடம்பெற்றது.
வடபுல உலமாக்களின் தலைவரும் தில்லையடி முஹாஜிரீன் அரபுக் கல்லூரி அதிபருமான எஸ்.எச்.எம். முபாரக் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனப் பேரணியும் இடம்பெற்றது.
நிகழ்வில் சிறப்பதிதிகளாக புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் அப்துல்லா மஹ்மூது ஆலிம், புத்தளம் மொஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதம தர்மகர்த்தா எஸ்.எச்.எம். முஸம்மில் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
புத்தளம் பகுதியிலுள்ள முப்படைகளின் மற்றும் பொலிஸ் ஆகியவற்றின் உயரதிகாரிகளுக்கு விசேட கெளரவங்கள் அளிக்கப்பட்டன.இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான இடம் பெயர்ந்த மக்களுடன் உள்ளூர் பெரும்பான்மை இன மக்களும் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply