5 வருடங்களுக்குப்பின்னர் உயிருடன் ஐ.எஸ் தலைவர்! இலங்கை தாக்குதல்கள் குறித்தும் பேசிய அல் பக்தாதி!
இஸ்லாமிய அரசாங்கம் அல்லது ஐ.எஸ் எனப்படும் அமைப்பின் தலைவர் அபு பக்ர் அல் பக்தாதியிடமிருந்து 5 வருடங்களுக்குப்பின்னர் இன்று முதன் முறையாக வெளியிடப்பட்டதாக கூறப்படும் பரப்புரை காணொளி ஒன்று இன்று பகிரங்கமானது.
இந்த காணொளியில் அவர் இலங்கையில் அண்மையில் தமது அமைப்பு நடத்திய குருரமான தாக்குதல்கள் குறித்தும் பக்தாதி பேசியுள்ளார்.
ஐ.எஸ் அமைப்பின் அல் பர்ஹான் ஊடக வலையமைப்பால் வெளியிடப்பட்ட இந்த காணொளி 18 நிமிடங்களுக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது இந்த காணொளியில் தமது அமைப்பு உறுப்பினர்களின் கொலைக்கு அல்லது சிறையிடலுக்கு பழி தீர்க்கப்படுமென பக்தாதியால் குறிப்பிட்டப்பட்டுள்ளதாக கூறுப்பட்டுள்ளது
கறுத்த உடையணிந்தவாறு கால்களை மடித்தபடி இருந்த அபு பக்ர் அல் பக்தாதி ஐ.எஸ்ஸின் ஏனைய உறுப்பினர்களுடன் பேசியபோது இலங்கைத்தாக்குதல் குறித்தும் பேசியுள்ளதான சைற் புலனாய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
சிரியாவில் நடத்தப்பட்ட தமது விமானத்தாக்குதலின்போது அல்பக்கதாதி கொல்லபட்டதாக அமெரிக்காவும் ரஸ்யாவும் ஏற்கனவே அறிவித்திருந்தன.
அவ்வாறான அறிவிப்பின் பின்னர் பக்தாதியும் பகிரங்கமாக தோன்றாத நிலையில் அவர் கொல்லப்பட்டதாகவே பரவலாக நம்பப்பட்டது.
2014 ஆம் ஆண்டு ஈராக்கின் அல் நூரி மசூதியில் இருந்து ஐ.எஸ்ஸின் இஸ்லாமிய அரசாங்கம் (கலிபா) குறித்த பிரகடனத்தை செய்த பின்னர் தற்போது தான் அல் பக்தாதி பகிரங்கமாக தோன்றியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த காணொளி எடுக்கபட்ட காலம் தெரியாவிடினும் அவர் இலங்கைத்தாக்குதல்கள் குறித்து பேசியிருப்பதால் இது அண்மையில் வெளியிட்ப்பட்ட காணொளி என நம்பப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply