பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் இலங்கைக்கு பயணமாகிறார். விடுதலைப் புலிகளுடனான தமது போரில் இலங்கை அரசு வெற்றி நிலையில் இலங்கைக்கான தமது பயணத்தின் போது அங்கு ஒரு அரசியல் நல்லிணக்கம் ஏற்பட கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமது பயணத்தின் போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க விருக்கும் பான் கீ மூன் அவர்கள், போரினால் இடம் பெயர்ந்த சுமார் மூன்று லட்சம் மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கும் விஜயம் செய்வார்.

தமது இலங்கை பயணத்தின் போது, விடுதலைப் புலிகள் மீதான போரில் தாங்கள் பெற்றுள்ள வெற்றிக்கான சர்வதேச அங்கீகார முத்திரையை பெற இலங்கை அரசுக்கு இந்த விஜயம் உதவக் கூடும் என்பது குறித்து பான் கீ மூன் அவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார் என்று ஐ நா வின் மூத்த அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply