ஒடிசாவில் பானி புயல் கரையை கடந்தது

ஒடிசா மாநிலத்தில் பானி புயல் இன்று காலை 8.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கியது. இதையடுத்து, ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. புரி, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கனமழையுடன், அதிக வேகத்தில் காற்று வீசியது.

இந்நிலையில், ஒடிசாவில் மணிக்கு 240 கி.மீட்டருக்கு மேல் பலத்த காற்று வீசிய நிலையில் பானி புயல் இன்று கரையை கடந்தது. இது மேற்கு வங்காளத்தை நோக்கி செல்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒடிசாவின் தலைமை செயலாளர் அனைத்து துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி வருகிறார்.

சாகிகோபால் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஒடிசாவில் பல இடங்களில் மின்சார சேவையும், தொலைத் தொடர்பு சேவையும் பாதிப்பு அடைந்துள்ளன. சாலையெங்கும் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மின் கோபுரங்கள், செல்போன் கோபுரங்கள் சாய்ந்துள்ளன.

சென்னையில் இருந்து இந்திய கடலோர காவல் படையின் 2 கப்பல்கள் மீட்பு பணிகளுக்காக ஒடிசா விரைந்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply