ஃபானி புயலால் ஒடிசாவில் பத்தாயிரம் கிராமங்கள் கடுமையாக பாதிப்பு
ஒடிசாவில் ஏற்பட்ட ஃபானி புயலினால் பத்தாயிரம் கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர், இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார் உள்ளிட்டோர் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.
அத்துடன் புயல் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய சுமார் 11 இலட்சம் பேர் தங்களின் வீடுகளுக்குத் திரும்பி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படுமெனவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நாளை பார்வையிடவுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு புயலின் போது உயிரிழப்புக்களை குறைத்தமைக்காக இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் ஏற்பட்ட ஃபானி புயலில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply