யாழ். குடாநாட்டில் தலைமறைவாக உள்ள புலி உறுப்பினர்கள் 48மணி நேரத்துள் படையினரிடம் சரணடைய வேண்டும் : யாழ். இராணுவத் தளபதி
யாழ். குடாநாட்டில் தலைமறைவாக உள்ள புலி உறுப்பினர்கள் சகல வன்முறைகளையும் கைவிட்டு 48மணி நேரத்துள் படையினரிடம் சரணடைய வேண்டுமென யாழ். இராணுவத் தளபதி கேட்டுள்ளார். அதேவேளை புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை கொடுத்து உதவுவது சட்டரீதியான மாபெரும் தவறு என்றும் தலைமறைவாக உள்ள புலி உறுப்பினர்களை படையினரிடம் சரணடைய செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்யுமாறும் யாழ். இராணுவத் தளபதி பொதுமக்களைக் கேட்டுள்ளார்.
யாழ். மக்களின் அமைதியான வாழ்வை சீர்குலைக்க தயாராயிருக்கும் புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதிகள் உட்பட வேறு தேவைகளை நிறைவேற்ற உதவுவது தவறென பொதுமக்களுக்கு அறியத்தருவதுடன் அவர்கள் உங்களின் உறவாக அல்லது நணர்பர்களாக இருந்தாலும் அவர்களின் வாழ்வுக்கான பாதுகாப்பையும் வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு தேவையான செயற்பாடுகளை தயவுசெய்து உடன் மேற்கொள்ளுங்கள்.
எவ்வித பயம், சந்தேகமின்றி தலைமறைவாக உள்ள புலி உறுப்பினர்களை சரணடைய செய்ய உங்களால் முடியாவிட்டால் புலனாய்வுத் தகவலின்படி அவர்களை கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு பாதுகாப்பளித்த குற்றவாளியாக நீங்களும் குற்றவாளியாக கருதப்படுவீர்கள் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply