ஆஸ்திரேலியாவில் டிரம்ப் முகமூடி அணிந்து திருடிய வினோத திருடன் : நெட்டிசன்கள் கேலி

பொதுவாக திருடர்கள், பொது இடங்களில் திருடும்போதும், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களிலும் போலீசார், பொதுமக்கள் என யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக முகமூடி அணிந்து திருடிச் செல்வது வழக்கமான ஒன்று தான்.

திருடர்கள் முகத்தில் கருப்பு நிற முகமூடி அணிந்தோ, அல்லது கர்ச்சீப் கட்டி கொண்டோ தான் திருட்டில் ஈடுபடுவர். அப்படி ஒரு திருடன் ஆஸ்திரேலியாவில் வினோதமாக திருடியுள்ளான்.

ஆஸ்திரேலியாவின் ஸ்ட்ராத்பைன் பகுதியில் உள்ள கடைத்தெருவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முகமூடியை அணிந்துக் கொண்டு நள்ளிரவில் திருடச் சென்றுள்ளான். அங்கிருந்த வாட்ச் கடையின் கண்ணாடியினை உடைத்து அதன் அருகே வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த வாட்சுகளை திருடிச் சென்றான்.

மேலும் அருகிலிருந்த எலக்ட்ரானிக் கடையில் இருந்த சில பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றான். இவை அனைத்தும் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமிராக்களில் பதிவாகியுள்ளது.

கடையின் வெளியே வந்த போது, கையில் இருந்த பொருள் கீழே விழுந்ததை எடுக்க குனிந்தான். அப்போது அந்த முகமூடி கீழே விழுந்தது. இதனையடுத்து அந்த நபரை அடையளம் கண்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த திருடனின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள், ‘பொய்யான செய்தி, இன்னும் குளோசப் தேவை’, ‘தக் லைப்’, ‘நடுவே சுவர் ஒன்றை எழுப்புங்கள், அது அவரை சுற்றி பாதுகாக்கும்’ என கேலி செய்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply