இலங்கை வந்த ஐ.நா. செயலாளர் வவுனியா சென்றார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் வவுனியாவுக்குச் சென்று மெனிக்பார்ம் நலன்புரி நிலையத்திலுள்ள மக்களைச் சந்தித்துள்ளார். “இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு மனிதநேயப் பணியாளர்கள் சுதந்திரமாகச் சென்று பணியாற்றும் சூழ்நிலை இருக்கவேண்டுமென்பதற்கே நான் முன்னுரிமை அளிக்கிறேன்” என அவர் கூறினார்.

“நீண்டகாலமாகத் தொடர்ந்த மோதல்கள் முடிந்துவிட்டன. இன மற்றும் மத வேறுபாடின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யும் காலம் தற்பொழுது இலங்கையில் தோன்றியுள்ளது” என பான்கீ மூன் இலங்கை வந்திறங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு இலங்கைவந்த பான்கீ மூன் இன்று அதிகாலை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவைச் சந்தித்ததுடன், இன்று காலை வவுனியாவுக்கு வான்வழியாகச் சென்றார். அங்கிருந்து கண்டிசெல்லும் பான்கீ மூன், தற்பொழுது கண்டியிலிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார். தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு இலங்கையில் ஒற்றுமைய வளர்க்கப்பட வேண்டுமென ஜனாதிபதியுடனான சந்திப்பில் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply