புலிகளுக்கெதிரான 4ஆவது சர்வதேச புகைப்படக் கண்காட்சி இத்தாலியில்!

சர்வதேச ரீதியாக இடம்பெற்று வரும் புலிகளுக்கெதிரான 4ஆவது புகைப்படக் கண்காட்சி நேற்று இத்தாலியில் ஆரம்பமாகியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ரோமிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஐரோப்பிய பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சியில் புலிகள் அமைப்பின் மனிதாபிமானமற்ற நாசகார நடவடிக்கைகளை சித்தரிக்கும் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இத்தாலியின் ரோம் நகரிலுள்ள பொபொலயர் பல்கலைக்கழக மண்டபத்தில் நேற்று ஆரம்பமான இக்கண்காட்சி நாளை முடிவடையவுள்ளது. இக்கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நோபொலி நகரிலுள்ள பெடரிகோ பல்கலைக்கழகத்திலும் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை மிலானோ நகரிலும் நடைபெறவுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இவ்வாறான 3 கண்காட்சிகள் கடந்த மாதங்களில் பிரிட்டன் நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply