சிறீ ரெலோ வவுனியாவில் மக்கள் தொடர்புக் காரியாலயம் திறப்பு.
வவுனியா – வைரவபுளியங்குளத்தில் 20-05-2009 அன்று சிறீ ரெலோ மக்கள் தொடர்புக் காரியாலயம் ஒன்றை புதிதாகத் திறந்துள்ளது. சிறீ ரெலோ வவுனியா மாவட்ட பொறுப்பாளர் அகிலன் ஏற்பாட்டில் சிறீ ரெலோ செயலாளர் உதயராசா தலைமையில் நிகழ்ந்த வைபவத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டர். இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜ குகனேஸ்வரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
நூற்றுக்கணக்கான பொது மக்களும் அரச அலுவலர்களும் கலந்து கொண்ட இவ்விழாவில் இலங்கை தேசியக்கொடி, சிறீ ரெலோ கட்சிக் கொடி என்பன ஏற்றப்பட்டன. புதிய காரியாலயம் நாடா வெட்டி திறக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றி மக்கள் மகிழ்வுடன் புதிய காரியாலயம் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் பின்னர், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவர்களான தங்கதுரை, குட்டிமணி, ஜெகன், சிறீ சபாரட்னம் மற்றும் ரெலோ போராளிகள், மாற்று அமைப்புத் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள் மற்றும் கால்நூற்றாண்டு நீண்ட யுத்தத்தில் பலியான பொது மக்கள் அனைவருக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைக்கு தீர்வு காண்பதற்கும் மற்றும் நிர்வாகத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கும் மக்களுக்கு உதவும் முகமாகவே சிறீ ரெலோவினால் இம் மக்கள் தொடர்ப்புக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதென சிறீ ரெலோ செயலாளர் உதயராசா அங்கு கூடிய மக்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
சிறீ ரெலோ மக்கள் தொடர்ப்பு காரியாலய முகவரி : வைரவர் கோவிலடி, வைரவபுளியங்குளம், வவுனியா.
(மேற்படி நிகழ்வில் இருந்து சில காட்சிகளின் கீழே………)
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply