கைப்பற்றப்படும் வாள்களை பார்த்து பயப்பட வேண்டாம் : இராணுவத் தளபதி
நாட்டில் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகளில் போது கைப்பற்றப்படும் வாள்கள், கத்திகள் தொடர்பில் மக்கள் பயப்படத் தேவையில்லையென இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்படும் பெரும்பாலான வாள்கள் பழையவையெனவும் நீண்டகாலமாக பாவனையற்றுக் கிடந்தைவையெனவும் அவை துருப்பிடித்துக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய இராணுவத் தளபதி மக்கள் இது தொடர்பில் பயப்படத் தேவையில்லையென விளக்கமளித்துள்ளார்.
மேலும் இலங்கையிலுள்ள வீடுகளில் ஆயுதங்கள் மற்றும் வாள்கள் இருப்பது புதுமையான விடயமல்ல எனவும் இலங்கையர்கள் விஜயன் காலத்திலிருந்து வாள்களைக்கொண்டு போர் புரிந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஒரு சில ஊடகங்கள் இவை தொடர்பில் ஊதிப்பெருப்பித்து தகவல்களை திரிவுபடுத்தி வெளியிடுவதாகவும் மக்களை தேவையற்ற அச்சத்திற்கு உள்ளாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சோதனை நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட துப்பாக்கி தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இராணுவ தளபதி என்.டீ.ஜே அமைப்பிற்கு சொந்தமான டீ 56 ரக துப்பாக்கி ஒன்று மாத்திரமே இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சகோதர மொழி ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றின் போதே இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply