தமிழ் பேசும் மருத்துவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு விடுத்துள்ளார்

வன்னியிலிருந்து இடம்பெயர் ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க தமிழ் பேசும் மருத்துவர்களை முன்வந்து உதவுமாறு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து நலன்புரி நிலையங்களுக்குமான மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு சுழற்சி முறையில் மருத்துவர்கள் குழு பணியாற்றச் செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் இப்பணியில் இணைந்து கொள்ளும் மருத்துவர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் ஏனைய வசதிகள் அனைத்தையும் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சின் ஊடாக ஏற்பாடு செய்து தருவதற்கும் முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி பேசக் கூடிய மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு மேற்கொள்படும் இம்முயற்சிக்கு மருத்துவர்கள் மனிதாபிமான அடிப்படையில் முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளதுடன் எமது மக்கள் தற்போது எதிர்கொண்டிருக்கும் உணவு, உடை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை அவர்களின் மருத்துவத் தேவைகளைப் பொறுத்த வரையில் அதற்கு விசேட ஏற்பாடுகள் அவசியம் என்பதை தான் புரிந்து கொண்டுள்ளதாகவும் எனவே இம்மாபெரும் மனித நேயப் பணியில் அனைவரும் உணர்வோடும் அர்ப்பணிப்போடும் பணியாற்ற இணைந்து கொள்ளுமாறு தான் வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply