சகல மக்களும் சம உரிமையுடன் வாழ ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பான் கீ மூன் பாராட்டு
நாட்டின் சகல மக்களும் மத, இன வேறுபாடின்றி சம உரிமையுடன் வாழுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுக்கின்ற நடவடிக்கைகளை ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் பாராட்டினார். கண்டியில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசிய ஐ. நா செயலாளர் நாயகம் பான்கீ மூன், நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் சந்திப்பு இடம்பெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த பான்கீ மூன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் வரவேற்கக் கூடியதாக இருந்தது. சகல மக்களுக்கும் சம உரிமைகளுடன் ஐக்கிய இலங்கைக்குள் வாழும்நிலை உருவாகியிருக்கிறது. பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்துக்களைப் பரிமாறியதாகக் கூறினார். புலிகளின் பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர் புலிகள் அப்பாவி மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி யுத்தம் புரிந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
நிவாரணக் கிராமங்களின் நலன்புரி நடவடிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், அங்குள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். இடம்பெயர்ந்திருப்பவர்களில் 80 வீதமானோர் இந்த ஆண்டு முடிவுக்குள் மீள்குடியேற்றப்பட்டு விடுவரென அரசாங்கம் உறுதியளித்துள்ளதெனவும் ஐ. நா. செயலர் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதில் கண்ணிவெடிகளும் ஒரு தடையாக இருக்கிறது. கண்ணி வெடிகளை அகற்றுவதற்கும் முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டும் எனவும் அவர்கேட்டுக் கொண்டார்.
இந்த நாட்டில் வாழும் சகல மக்களும்அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழவதற்கேற்ற அடிப்படைத் திட்டமொன்றை அரசாங்கம் வழங்குமென தான் எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர் புனர்வாழ்வு புனரமைப்பு பணிகள் மேலும் துரிதமாக்கப்பட வேண்டும் என்றார். இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் ரோஹித போகொல்லாகம,
பயங்கரவாதத்தை ஒழிக்க பாடுபட்ட படை வீரர்கள் எத்தகைய மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடவில்லை எனத் தெரிவித்தார்.
இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான சகல முனைப்புகளிலும் அரசு உறுதியுடன் செயற்படுகிறது. இதற்காக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அரசுக்கு ஒத்துழைக்க முன்வந்திருக்கின்றன எனவும் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply