பிரபாகரனின் மரபணு பரிசோதனைகள் அவசியமில்லை: உதய நாணயக்கார
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணு பரி சோதனைகள் அவசியமற்றவை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.பிரபாகரனின் சடலத்தை விஞ்ஞான ரீதியாக அடையாளம் காண மரபணு பரிசோதனைகள் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவரும் அவரது புதவல்வரான சார்ள்ஸ் அன்தனியும் கொல்லப்பட்டுள்ளமையினால் இரத்த மாதிரிகளை சோதனையிடுவதன் மூலம் மரணங்களை உறுதிப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், மரபணு பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், பிரபாகரனது உடல் புதைக்கப்பட்டதா அல்லது எரிக்கப்பட்டதாக என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவரது உடலை எரித்ததாக பிரிகேடியர் உதய நாணயக்கார பதிலளித்துள்ளார்.
பிரபாகரனின் கைவிரல் அடையாளங்களை இந்தியா பதிவு செய்து கொண்டுள்ளதாகவும், அதன் ஓர் பிரதி டொரின்டன் சதுக்கத்தில் உள்ள கைவிரல் அடையாளப் பதிவு பிரிவில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
குறித்த கைவிரல் அடையாளப் பிரதிகளை ஒப்பீடு செய்வதன் மூலமும் விஞ்ஞான ரீதியாக பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் இயங்கி வரும் இன்டர்போல் காவல்துறைப் பிரிவு, சர்வதேச இன்டர்போல் காவல்துறைப்பிரிவிடம் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மானின் மரணங்கள் பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மானின் பெயர்கள் மிகவும் முக்கியமான பெயர்களாக கருதப்படுகின்றது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply