ரஷ்யாவின் ராக்கெட்டை மின்னல் தாக்கியது

ரஷ்யாவின் சோயுஸ்-2.1பி  என்னும் ராக்கெட் குளோனஸ் என்னும் செயற்கைகோளுடன் திங்கள் அன்று ப்ளேசேட்ஸ்க் காஸ்மோட்ராம் என்னும் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. அன்று வானிலை சற்றே மோசமாக இருந்தது. இருப்பினும் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணி தள்ளிவைக்கப்படவில்லை. விண்ணில் ஏவப்பட்ட 10 விநாடிகளில் இந்த ராக்கெட்டை மின்னல் ஒன்று தாக்கியது. 

இதை உறுதிசெய்த அதிகாரிகள், “ராக்கெட்டுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, திட்டம் வெற்றிதான்” என்று தெரிவித்துள்ளனர். மின்னல் தாக்கிய  வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. 

இதுபோல் 1969-ல் நாசாவின் அப்பல்லோ 12 மிஷனில் பயன்படுத்தப்பட்ட சனி- 5 ராக்கெட் ஒன்றை இருமுறை மின்னல் தாக்கியது. இது மனிதர்களைக் கொண்டு சென்ற ராக்கெட். இது சிறிய தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும் அப்போதும் பெரிய பாதிப்புகள் இல்லை. 

ராக்கெட்களை கட்டமைக்கும் விஞ்ஞானிகள் அதில் இருக்கும் உலோகங்கள் மின்னல்களை ஈர்க்கும் என்பதை அறிந்து அதற்கேற்றபடியே அவற்றை வடிவமைக்கின்றனர். இதனால் மின்னல்கள் ராக்கெட்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவது கிடையாது. 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply