மோடியின் பதவியேற்பு வைபவம் இந்தியா பயணமான: ஜனாதிபதி
இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு வைபவம் புதுடில்லியில் இன்று (30) இடம்பெறவுள்ளது.இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு தனது விஜயத்தை இன்று காலை மேற்கொண்டுள்ளார்.இந்திய பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றது.
2 வது தடவையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் பதவியேற்கவுள்ளார்.புதுடில்லியில் நடைபெறும் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட மேலும் சில நாடுகளின் உயர் மட்ட தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply