மோடி பதவியேற்பு விழாவில் கமல் கலந்து கொள்ளவில்லை

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற்று நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக இன்று இரவு பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தலைவர்கள், மாநில முதல்வர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவர் விழாவுக்கு செல்வதாக பேட்டியில் கூறிவிட்டார்.

இந்த தேர்தலில் முதன் முறையாக அரசியல்வாதியாக களம் இறங்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனையும் அழைத்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தின்போது, ‘இந்து தீவிரவாதம்’ குறித்து பேசியதற்காக பா.ஜனதாவினர் கமல்ஹாசனை மிக கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில்தான் பிரதமர் பதவியேற்புக்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட செய்தி வெளியானது. ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் சம்பிரதாய அழைப்பு மட்டுமே விடுக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை முறையான அழைப்பு வராததால், பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply