பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானாவ் தீவில் இன்று மாலை 3.42 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 6.1 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால், பீதியடந்த மக்கள் உயிர் பயத்தில் வீடுகளைவிட்டு ஓட்டம் பிடித்து திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அருகாமையில் உள்ள இந்தோனேசியா நாட்டின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது.இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் பாதிப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply