இலங்கை அதிபர் பதவிக்கு நவம்பர் 15 : டிசம்பர் 7-ந்தேதிக்குள் தேர்தல்

இலங்கை அதிபராக மைத்ரியபால சிறிசேனா கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 5-ந்தேதி தேர்வு செய்யப்பட்டார். அவர் ராஜபக்சேவை வீழ்த்தி இலங்கை அதிபரானார். சிறிசேனாவுக்கு 51.28 சதவீத ஓட்டுகளும், ராஜபக்சேவுக்கு 47.58 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.

இலங்கை அதிபர் சிறிசேனாவின் 5 வருட பதவி காலம் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 8-ந்தேதியுடன் முடிவடைகிறது.

அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு இலங்கை அதிபர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இலங்கை அதிபர தேர்தல் தொடர்பாக அந்நாட்டு தேர்தல் கமி‌ஷன் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 7-ந்தேதிக்குள் நடத்தப்படும் என்று அந்நாட்டு தேர்தல் கமி‌ஷன் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் சேர்மன் மகிந்தா தேஷ்பிரியா இன்று கூறியதாவது:-

இலங்கை அதிபரின் பதவி காலம் முடிவதற்கு 1 மாதத்திற்கு முன்பு இலங்கை அதிபர் தேர்தலை கண்டிப்பாக நடத்த வேண்டும். நவம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 7-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு தேதியில் தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டிசம்பர் 7-ந்தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறும் என்று கடந்த வாரம் சிறிசேனா டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply