மகாநாயக்கர்கள் ஒன்றுபட்டு பலம் மிக்க ஓரணியாவோம் : ஞானசார தேரர் பரிந்துரை
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டையும், இனத்தையும், சங்க சாசனத்தையும் பாதுகாப்பதற்கு சகல மகாநாயக்க தேரர்களும், சங்க சபைகளும் இணைந்து பலமிக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் பரிந்துரை செய்துள்ளார்.
சகல தேரர்களும் அங்கத்துவம் கொண்டுள்ள இந்த பலம்வாய்ந்த அமைப்பு, கண்டி தலதா மாளிகையை மத்திய நிலையமாக கொண்டு செயற்பட வேண்டும் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பேராதெனிய கெடம்பே ராஜோவனாராமயில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தேரர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply