ஆபத்தான ‘வேக்கம் சேலஞ்ச்’ இப்போது வைரல்

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகி அதனை பலரும் செய்து வீடியோவாக பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது. டென்(10) இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்ற பல்வேறு சவால்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வந்தது.

உலகின் பல்வேறு பகுதியில் வாழும் மக்களும் இந்த சேலஞ்சிகளை ஏற்றுக்கொண்டும் தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டும் இருந்தனர். அந்த வகையில், தற்போது ‘வேக்கம் சேலஞ்ச்’ (Vacuum Challenge) என்ற பெயரில் சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

இதில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் ஒருவர் அமர்ந்து கொண்ட உடன், அந்த பைக்குள் வேக்கம் க்ளினரின் பைப்பை விட்டு, மற்றொருவர் ஆன் செய்கிறார். சிறிது நேரத்தில் பைக்குள் இருக்கும் நபரின் உடலை, பிளாஸ்டிக் பை இறுக்குகிறது.

வைரலாகி வரும் இந்த ஆபத்தான சவாலை பெரியவர்கள் முதல் சிறுவர், சிறுமியர் என பலரும் ஆர்வத்துடன் செய்து, அதன் வீடியோவை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply