கபீர் ஹாஷிம் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா!

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலகுமாறு கொடுக்கப்பட்ட அழுத்தத்தைத் தொடர்ந்து அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல்லத்தில் இன்று காலை கூடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். (ஸ)

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களான கபீர் ஹாஷிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் இராஜினாமா செய்யமாட்டார்கள் என செய்திகள் வெளியாகியிருந்த இந்த சந்தர்ப்பத்தில், குறித்த இருவர் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இராஜினாமா செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு பிற்பகல் 3:30 மணிக்கு அலறி மாளிகையில் நடைபெறவுள்ளது.

அதேவேளை அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தாலும், தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவளிக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply