பதவி விலகிய குற்றச்சாட்டுள்ளவர்களை கைது செய்யவும்: S.B. திஸாநாயக்க
அரசாங்கத்தின் பதவிகளிலிருந்து விலகினால் மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாது எனவும், அடிப்படைவாதிகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், எதிரணியிலுள்ள கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரிஷாத் பதியுதீன் தற்பொழுது அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளதனால், அவரை பதவி விலகுமாறு முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பது அவசியமற்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து அவரிடம் வினவியதற்கே ஊடகங்களிடம் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply